தமிழகத்தில் இனி டிகிரியுடன் தொழிற் பயிற்சியும் படிக்கலாம்!
சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பட்டப்படிப்புடன், தொழிற் பயிற்சிக்கான பட்டய சான்றிதழ் படிப்பையும் சேர்த்து படிக்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முதல்முறையாக இந்த தி்ட்டம் தமிழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
மாணவர்கள் படிக்கும் போதே வேலைவாய்ப்புகளை பெருக்கிக் கொள்வதற்காக இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாகவும், ஒவ்வொரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் இத்திட்டத்திற்காக அந்தந்த மாவட்டத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுடன் இணைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மல்டிமீடியா, டேலி, வெப் டிசைனிங், அனிமேஷன், இ-காமர்ஸ், டிரைவிங், ஆடைகள் வடிவமைப்பு, ஏசி மெக்கானிக் போன்றவை தொழிற்பயிற்சிகளாக அரசு பட்டியலிட்டுள்ளது.
இத்திட்டத்தை தமிழக முதல்வர் கருணாநிதி இன்று சென்னையில் துவக்கிவைத்து மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறினார்.












Click it and Unblock the Notifications