தீவிரவாத தொடர்பு சந்தேகம் - டெல்லி விமான நிலையத்தில் அமெரிக்கர் கைது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவருடைய பையிலிருந்து கத்தி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டெல்லிக்கு வருவதற்கு முன்பு இவர் பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கும் போயுள்ளார். எனவே அவருக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபரின் பெயர் வின்ஸ்டன் மார்ஷல். புதன்கிழமை இவர் கைது செய்யப்பட்டார். கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் டோஹாவுக்கு செல்ல அவர் தயாரானபோது கைது செய்யப்பட்டார்.
அவரது பையில் இருந்த கத்தியை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையின்போது கண்டுபிடித்தனர். அதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்டபோது சரியான முறையில் அவர் பேசவில்லை. இதையடுத்து கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications