நோக்கியா-ஏர்டெல் $700 மில்லியன் ஒப்பந்தம்
பார்தி ஏர்டெல் நிறுவனத்திடமிருந்து 700 மில்லியன் டாலருக்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது நோக்கியா சீமென்ஸ் நெட்வொர்க் நிறுவனம்.
தொலைத் தொடர்பு கருவிகள் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது நோக்கியா சீமென்ஸ்.
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஜிஎஸ்எம் நெட்வொர்க் பிளானிங், புராஜக்ட் மேனேஜ்மெண்ட், பொருள்கள் கையாளுதல் என பல விஷயங்களை இனி நோக்கியா சீமென்ஸ் பார்த்துக்கொள்ளும்.
ஏர்டெல் மொத்தம் எட்டு தொலைத் தொடர்பு வட்டங்களைக் கொண்டுள்ளது. மும்பை, மகாராஷ்ட்ரா மற்றும் கோவா, குஜராத், மத்தியபிரதேசம் மற்றும் சண்டிகர், பிகார் மற்றும் ஜார்க்கண்ட், ஒரிஸ்ஸா, கொல்கத்தா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற பகுதிகளில் நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது.
"தொலைத் தொடர்புத் துறையில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவதில் ஏர்டெல் எப்போதும் முதல்நிலை வகிக்கிறது. நோக்கியா சீமென்ஸுடனான இந்த ஒப்பந்தம் ஏர்டெல் நெட்வொர்க்கை மேலும் விரிவாக்கும். கடைசி நிலை வாடிக்கையாளர் வரை எங்கள் சேவையை முழுமையாகக் கொண்டுபோய் சேர்க்கும்" என்கிறார் பார்தி ஏர்டெல் சிஇஓ சஞ்சய் கபூர்.












Click it and Unblock the Notifications