கேபினட் கூட்டத்தில் பிரணாப்புடன் மோதல்-மம்தா அழுகை

பட்ஜெட் தயாரிப்புப் பணி முடியப் போகும் நேரத்தில் இந்தத் திட்டங்களை எல்லாம் சேர்க்க முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கும் கூறிவிட்டார்.
அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக கேபினட் கூட்டத்தில் இந்த விவகாரம் நடந்தது. தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் மனமுடைந்த மம்தா பானர்ஜி கண்ணீர் விட்டு அழுதார்.
நேற்று இரவு இக் கூட்டம் நடந்தபோது மேற்கு வங்கத்துக்கு 10 திட்டங்கள் உள்பட 24 திட்டங்களை வரும் பட்ஜெட்டில் சேர்க்க வசதியாக, அந்தத் திட்டங்களுக்கு கேபினட் உடனே அனுமதி வழங்க வேண்டும் என்றார் மம்தா.
ஆனால், அதை பிரணாப் முகர்ஜி ஏற்க மறுத்தார். பட்ஜெட் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் எப்படி இந்தத் திட்டங்களை சேர்ப்பது, அதற்கு நிதி ஒதுக்க வேண்டாமா, பணம் எங்கே இருக்கிறது என்று பிரணாப் கேட்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து பிரதமரிடம் திரும்பிய பிரணாப், நீங்கள் சொன்னால் நான் பட்ஜெட்டில் சேர்க்கிறேன். ஆனால், இந்தத் திட்டங்களுக்கு பணம் எங்கே இருக்கிறது என்பதையும் நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து பிரதமர் தலையிட்டு, கடைசி நேரத்தில் இவ்வளவு பெரிய திட்டங்களை எப்படிச் சேர்ப்பது?, இதற்கெல்லாம் திட்டக் கமிஷனின் அனுமதிப் பெற்றாக வேண்டுமே?, நிதி வேண்டுமே?, அதையெல்லாம் உடனடியாக ஒதுக்குவது சாத்தியமா? என்று மம்தாவிடம் அடுக்கடுகாக கேள்விகளை எழுப்பினார்.
மேலும் இந்தத் திட்டங்களுக்கு நீங்களே (மம்தா) நிதியைத் திரட்டித் தந்தால் பட்ஜெட்டில் சேர்க்கலாம் என்றார் பிரதமர்.
இதனால் மனமுடைந்த மம்தா பானர்ஜி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார். அவரை மத்திய அமைச்சர்கள் குமாரி செல்ஜா, விலாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோர் சமாதானப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications