ராஜீவ் காந்தி கொலை- பிரபாகரன், பொட்டு அம்மான் மீதான வழக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிரபாகரன், பொட்டு அம்மான் மீதான ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை மே மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டது.
பிரபாகரன், பொட்டு அம்மானைப் பிடிக்க முடியாததால் அவர்கள் இருவரையும் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து பிரித்து தனி வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது.
சென்னை 1-வது தடா கோர்ட் நீதிபதி பி.ராமலிங்கம் வழக்கை விசாரிக்கிறார்.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. அதிகாரிகள், வக்கீல் ஆகியோர் நீதிபதி பி.ராமலிங்கத்திடம் சீலிட்ட கவரில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தனர்.
அதைத் தொடர்ந்து வழக்கு மே மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications