சிலியில் மீண்டும் நிலநடுக்கம்-மக்கள் பீதியில் ஓட்டம்

கடந்த வாரம் சிலி நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 800 பேர் உயிரிழந்தனர்.
பூகம்பத்தால் வீடுகள் இடிந்து 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறைவிடம் இன்றி தவித்து வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்துக்கு பின்னர் அவ்வப்போது பூகம்பத்துக்கு பிந்தைய அதிர்வுகள் உணரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று அதிகாலை மீண்டும் பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.0 மற்றும் 5.9 என பதிவாகியிருந்தது.
இந்த நிலநடுக்கம் சிலி நாட்டின் அருகே கடல் பகுதியில் மையமாகக் கொண்டு ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையத்தகவல் தெரிவித்தது.
சிலி தலைநகரம் சான்டியாகோ, வால் பரேசியோ உள்ளிட்ட பகுதிகளில் இந்த பூகம்பகம் உணரப்பட்டது.
சுனாமி ஏற்படலாம் என்றும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள் அலறியடித்து பாதுகாப்பான இடங்கள் நோக்கி ஓடினர்.
எனினும் சிறது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
தைவானில் பயங்கர பூகம்பம்:
இதற்கிடையே தைவானின் தெற்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 6.4 என பதிவான இந்த சக்தி வாய்ந்த பூகம்பத்தால் பரவலாக பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.
தைவான் தலைநகரான தைப்பேயில் இருந்து சுமார் 400 கி.மீ தொலைவில் உள்ள கவோன்சியங் என்ற இடத்தை மையமாகக் கொண்டு இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களிவும் தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு, கட்டிடங்களுக்கு சேதாரங்களும் ஏற்பட்டுள்ளன.
இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும் உயிர் பலி குறித்து உடனடியாக தகவல்கள் இல்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications