பென்னாகரம் தேர்தல்: அதிமுகவுக்கு வழக்கம்போல் மறைமுக ஆதரவு-பாஜக திட்டம்

சென்னையில் இன்று நடக்கும் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது.
வந்தவாசி, திருச்செந்தூர் தொகுதி இடைத் தேர்தல்களை பாஜக புறக்கணித்தது. பாஜக உட்கட்சித் தேர்தல் நடப்பதால், தேர்தலை புறக்கணிப்பதாக ஒரு உப்பு சப்பில்லாத காரணத்தை அந்தக் கட்சி கூறியது. உண்மையான காரணம், தேர்தலில் போட்டியிட்டால் அதன் உண்மை 'பலம்' வெளியில் தெரிந்துவிடும் என்பு தான்.
இந்நிலையில் பென்னாகரம் இடைத் தேர்தலையும் புறக்கணிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். ஆனால், அதற்கான காரணத்தைக் கூறவில்லை.
இதற்கிடையே இடைத்தேர்தலை புறக்கணிக்காமல் அதிமுகவை ஆதரிக்கலாம் என்று முன்னாள் தலைவரான இல.கணேசன் மற்றும் ஒரு பிரிவினர் கூறி வருவதாகத் தெரிகிறது.
ஆனால், தங்களிடம் அதிமுக ஆதரவே கோராத நிலையில் எப்படி நாமாகப் போய் ஆதரவைத் தெரிவிப்பது என்று பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் இன்னொரு பிரிவினர் யோசிப்பதாகத் தெரிகிறது.
பாஜக ஆதரவைக் கோரினால் அதுவே தங்களுக்கு ஆபத்தாக முடியும் என அதிமுக கருதுகிறது.
இதனால் பாஜக ஆதரவு அளித்தாலும் அதை நான் கேட்கவே இல்லையே என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளிப்படையாக சொல்லி மானத்தை வாங்கவும் வாய்ப்புள்ளது.
இதையடுத்து என்ன தான் செய்வது என்பது குறித்து முடிவெடுக்க இன்று மாநில நிர்வாகிகள் கூட்டத்தை பாஜக கூட்டியுள்ளது.
இதில் வழக்கம்போல் அதிமுகவுக்கு மறைமுக ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஏதாவது முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications