திமுகவில் மானசீகமாக இணைந்துவிட்டேன்-எஸ்.வி.சேகர்
கோவை: திமுகவில் மானசீகமாக இணைந்துவிட்டேன் என்று மயிலாப்பூர் அதிமுக எம்எல்ஏவும் நடிகருமான எஸ்.வி.சேகர் கூறினார்.
கடந்த 2006ம் ஆண்டு மயிலாப்பூர் சட்டசபைத் தொகுதியில் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.வி.சேகர் (சட்டநாதபுரம் வெங்கட்ராமன் சேகர்) பல்வேறு காரணங்களால் அதிமுகவில் ஓரங்கட்டப்பட்டார்.
இதைத் தொடர்ந்து திமுகவுடன் உறவாடி வந்த சேகர், எம்எல்ஏ என்ற முறையில் ஆளும்கட்சி தலைவர்களை சந்திப்பதாக கூறி வந்தார்.
திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணையவில்லை என்றாலும், கடந்த மாதம் நடந்த திமுக பொதுக்குழுவிலும் எஸ்.வி.சேகர் கலந்து கொண்டார்.
இந் நிலையில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கோவை மாநகர திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ஸ்டாலின் பங்கேற்ற இந்த விழாவிலும் எஸ்.வி.சேகர் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசுகையில், 'திமுகவில் நான் மானசீகமாக இணைந்துவிட்டேன். அதை அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்பேன் என்றார்.
விழாவில் ஸ்டாலின் பேசுகையில், திமுக தொடங்கப்பட்டதில் இருந்து பல்வேறு வெற்றிகளையும் பெற்றுள்ளது. தோல்விகளையும் கண்டுள்ளது. வெற்றியில் திமுக இறுமாந்ததுமில்லை. தோல்வியில் துவண்டதுமில்லை. இன்றைக்கு திமுக கட்டுக்கோப்புடன் செயல்பட்டு வருவதால் ஏராளமானோர் திமுகவில் இணைந்து வருகின்றனர். எப்போதும் மக்களுக்காக பாடுபடுவதுதான் திமுகவின் நோக்கம் என்றார்.
செம்மொழி மாநாட்டு பணி-ஸ்டாலின் ஆய்வு:
இந் நிலையில் உலக தமிழ் செம்மொழி மாநாட்டுப் பணிகள் குறித்து ஸ்டாலின் இன்று கோவையில் அரசு அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
-
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications