ஐஏஎஸ் தேர்வில் 83 பேர் தேர்ச்சி- சைதை துரைசாமி மனித நேய அறக்கட்டளை சாதனை
சென்னை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் பணிகளுக்கான மெயின் தேர்வில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மனித நேய அறக்கட்டளை மூலம் பயின்ற 83 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மனித நேய அறக்கட்டளையை நடத்தி வருபவர் சைதை துரைசாமி. அதிமுக பிரமுகரான இவர் முன்னாள் எம்.எல்.ஏ ஆவார். அரசியல்வாதியாக இருந்தாலும் கூட சமூக சேவையில் மிகுந்த அக்கறையும், அதில் உண்மையான சேவை மனப்பான்மையும் கொண்டவர்.
சைதாப்பேட்டையில் குடிசைவாழ் மக்களுக்காக மாலை நேர கல்வியை வழங்கிய பெருமைக்குரியவர். பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் சைதை சா. துரைசாமி தனது மனித நேய அறக்கட்டளை மூலம் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக விரும்புவோருக்காக இலவச பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார்.
இங்கு படித்தவர்களில் இதுவரை கடந்த 3 ஆண்டுகளில் 38 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக ஆகி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பணியில் அமர்ந்துள்ளனர்.
இந்த ஆண்டுக்கான மெயின் தேர்வை இந்த மையத்திலிருந்து 171 பேர் எழுதினர். அவர்களில் தற்போது 83 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் விசேஷம் என்னவென்றால் 171 பேருக்கும் தங்குமிடம், உணவு, உடை உள்ளிட்ட அனைத்துமே இலவசமாக வழங்கப்பட்டன என்பதுதான்.
தற்போது தேர்ச்சி பெற்றுள்ள 83 பேருக்கும் விரைவில் நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளன. மேலும் நேர்முகத் தேர்வுக்காக டெல்லி செல்லும் போது அங்கு தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளையும் மனித நேய அறக்கட்டளையே செய்து தரும்.
இந்த மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற விரும்புவோர் இன்று மையத்திற்குச் சென்று பெயர், விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மைய முகவரி...
மனிதநேயம் ஐஏஎஸ்- ஐபிஎஸ் இலவச பயிற்சி மையம்
28, முதலாவது மெயின் ரோடு, சிஐடி நகர்,
சென்னை- 600 035.
பயிற்சி இயக்குநரின் செல்போன் எண் - +91-994070110
ஹெல்ப் லைன் எண்கள் - 9025408908 / 9840106162
தொலைபேசி எண்கள் - 044 – 24358373 / 24330095
ஆன்லைனில் விண்ணப்பிக்க ..
http://www.saidaiduraisamysmanidhaneyam.com/
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications