கோடை காலம்-எலுமிச்சை விலை கடும் உயர்வு

நெல்லை மாவட்டம் புளியங்குடி மார்க்கெட்டிற்கு வாசுதேவநல்லூர், சிவகிரி, ராஜபாளையம், கழுகுமலை, கடையநல்லூர், மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து எலுமிச்சையை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இவை ஏல முறையில் ஆயிரம் பழங்களுக்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால் எலுமிச்சை விலை கடந்த வாரத்தை விட மும்மடங்கு உயர்ந்துள்ளது.
ரூ.600 முதல் 800 வரை விற்ற பழங்கள் கடந்த சில நாட்களாக ரூ.2400 வரை விற்பனை செய்யப்படுகின்றன. தமிழகம், கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் போட்டி போட்டு பழங்களை கொள்முதல் செய்து வருகின்றனர்.
சாதாரண காலங்களில் 5 முதல் 10 லாரிகள் கொள்முதல் செய்யப்படும். ஆனால் தற்போது எலுமிச்சை பழங்கள் தினசரி 50 முதல் 100 லாரிகள் வரை கொள்முதல் செய்யப்படுகின்றன.
இவை கேரளா மாநிலம் திருவனந்தபுரம், கொச்சி ஆகிய இடங்களில் இருந்து கப்பல், விமானம் மூலம் வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதே போல் பஸ்கள் மூலம் சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
ஆந்திராவில் அதிகளவு எலுமிச்சை விளைந்தாலும் புளியங்குடி எலுமிச்சைக்கு தனி மவுசு உண்டு. இங்குள்ள பழத்தில் சிட்ரிக் அமிலத்தின் அடர்த்தி தன்மை அதிகமாக உள்ளது.
எனவே இப்பழங்கள் வெளிமாநிலம், வெளிநாடுகளிலும் குளிர்பானங்களுக்கு மட்டுமல்லாது, உணவு பொருளுக்கு சாராகவும் பயன்படுத்துகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications