தமிழகத்தில் 16% மாணவர்கள் உயர்கல்வி பெறுகிறார்கள் - விஐடி பல்கலை வேந்தர் தகவல்
சென்னை: தமிழகத்தில் உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 16 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
சென்னை பெருங்களத்தூர் ஜிகேஎம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விஸ்வநாதன்,
'இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 6 லட்சம் மாணவர்கள் பொறியியல் துறையிலும், சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் மருத்துவத் துறையிலும் உயர்கல்வி பயின்று வருகின்றனர்.
தற்போது அகில இந்திய அளவில் உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை சராசரியாக 11 சதவிகிதம் உள்ளது. ஆனால், இது தமிழ்நாட்டில் 16 சதவிகிதமாக உயர்ந்து உள்ளது.
உலக அளவில் வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள 15 முதல் 18 சதவிகித இடத்தைத் தமிழகம் நெருங்கி இருப்பது மகிழ்ச்சியான விஷயம்.
ஆனால், பிகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 5 முதல் 6 சதவிகித அளவிலேயே இருப்பது வருந்தத்தக்கது.
வளர்ந்த நாடுகளில் உயர்கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கை 23 முதல் 28 சதவிகிதம் வரை உள்ளது. நம் நாட்டில் உயர்கல்வி பெறுவதிலும் நகர்ப்புற, கிராமப்புற மாணவர்கள், ஏழை, பணக்கார மாணவர்கள் என்ற வேறுபாடுகள் இருந்தாலும், சமீபத்தில் மாணவர்களுக்கு வங்கிக்கடன் உள்ளிட்ட சில வசதிகள் கிடைத்திருப்பது ஆறுதலான விஷயம்.
பொதுவாக, இங்கு உயர்கல்வி போதிக்க திறமையான பேராசிரியர்கள் இல்லை என்ற குறை முன்பு இருந்தது. ஆனால் வருமானம் உள்ளிட்ட வசதிகளுக்காக தொழில்துறைக்குச் சென்ற திறமையான பலர், இப்போது ஆசிரியர் பணிக்குத் திரும்பி வந்துள்ளனர்.
திறமையான மாணவர்கள் ஆசிரியப் பணிக்கு வரவேண்டும். விஐடியில் பயின்று தற்போது வெளிநாடுகளில் பணிபுரியும் பல பழைய மாணவர்கள் இந்தியா வரும்போது, விஐடிக்கு வந்து மாணவர்களிடம் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதுண்டு.
அதுபோல நீங்களும் உங்களது கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு உதவ முன்வர வேண்டும். சீன மாணவர்கள் இப்போது நம்மை விட வெகு வேகமாக முன்னேறி வருகின்றனர்.
நம்மைப் போலவே அவர்களுக்கும் ஆங்கிலத்தில் உரையாடும் திறன் குறைவாக உள்ளது. அவர்கள் இப்போது பெருமளவில் இங்கு வந்து தங்களது பன்முகத்திறன்களைக் கற்கத் தொடங்கி உள்ளனர்' என்றார்.
-
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்?












Click it and Unblock the Notifications