துருக்கியில் பயங்கர பூகம்பம்- 41 பேர் பலி
அன்காரா: துருக்கியில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 41 பேர் பலியானார்கள்.
துருக்கியின் கிழக்கு மாகாணப் பகுதிகளில் இன்று அதிகாலை 4.32 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.
துருக்கியின் கிழக்கே இலாஸிக் மாகாணத்தில் அமைந்துள்ள ஒக்குலார் என்ற சிறிய கிராமத்தில் நிலநடுக்கத்தின் தாக்கம் கடுமையாக இருந்ததாகவும், இந்த பூகம்பத்தில் எட்டு பேர் உயிரிழந்ததாகவும் மாகாண கவர்னர் மௌம்மெர் எரோல் தெரிவித்தார்.
அருகில் உள்ள கிராமங்களில் மேலும் 33 பேர் பூகம்பத்துக்கு பலியானதாக செய்திகள் வெளியாகின்றன. பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து கிராம மக்கள் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்துள்ளனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. நிலநடுக்கத்துக்கு பிந்தைய அதிர்வுகள் அப்பகுதியில் தொடர்ந்து உணரப்படுவதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.
பூகம்பத்துக்கு பிந்தைய அதிர்வுகளே ரிக்டர் அளவில் 4.1 என பதிவாகி இருந்ததாக இஸ்தான்புல் புவியியல் மையத் தகவல் தெரிவிக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications