உயர் கல்வி நிறுவனங்களில் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அமலாக 3 வருடங்களாகும்
டெல்லி: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த ஏற்கனவே 3 ஆண்டுகளாகும் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 3 ஆண்டுகள் இது தாமதமாகும் என்று மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
மத்திய கல்வி நிறுவனங்கள் சட்டம் கடந்த 2008-09 ஆம் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் படி 100 மத்திய கல்வி நிறுவனங்களில் 3 ஆண்டுகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.
இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கென கூடுதல் இடங்களை உருவாக்கி, அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திய பிறகே இட ஒதுக்கீட்டை அமல் படுத்த வேண்டும் என உச்ச நீதி மன்றம் கூறி இருந்தது.
இதற்கு 3 ஆண்டுகள் ஆகும் என திட்டமிடப்பட்டிருந்தது. 2011-12 ஆம் கல்வி ஆண்டுக்குள் அந்த நிறுவனங்கள் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கான உள் கட்டமைப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளுக்கு கால தாமதம் ஏற்படுவதாலும் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாலும் இட ஒதுக்கீட்டை அமல் படுத்த மேலும் 3 ஆண்டுகள் ஆகும் என மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரி பசந்த் குமார் மொஹந்தி கூறினார்.
வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சில கல்வி நிறுவனங்கள் ஏற்கெனவே தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மட்டும் 50 சதவீத இட ஒதுக்கீடு அளித்து வருகின்றன. இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் அந்த நிறுவனங்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் சிக்கல் ஏற்படும். இது போன்ற சிக்கல்களுக்கும் தீர்வு காண வேண்டும்.
எனவே இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டும், மத்திய கல்வி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த போதுமான கால அவகாசம் வழங்கும் விதமாகவும், இந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வர மேலும் 3 ஆண்டுகள் வரை கால அவகாசத்தை நீட்டிக்கும் வகையில் மத்திய கல்வி நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என மொஹந்தி கூறினார். இதற்கான திருத்தம் தற்போது சட்ட அமைச்சகத்தின் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிகிறது.
இது குறித்து நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங், இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து அரசு பின் வாங்காது. நிர்ணயிக்கப்பட்ட 3 ஆண்டுகளுக்குள்ளாகவே இட ஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சில நிறுவனங்கள் ஒரு ஆண்டுக்குள்ளாகவே கூட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திறன் வாய்ந்தவையாக இருக்கக்கூடும். அத்தகைய நிறுவனங்களில் உடனடியாக இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications