தனியார் மில்லில் தீ- ரூ.5 கோடி பொருட்கள் எரிந்து நாசம்
மேட்டுப்பாளையம்: தனியார் ஸ்பின்னிங் மில்லில் தீவிபத்து ஏற்பட்டு, ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் சாம்பலாயின.
மேட்டுப்பாளையத்தில் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் தனியாருக்கு சொந்தமான ஸ்பின்னிங் மில் உள்ளது.
இங்கு டர்கிடவல் தயாரிக்க தேவையான மூலப் பொருளான பஞ்சுகளை ஆந்திரா, மராட்டிய மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். மில்லையொட்டி குடோன் உள்ளது. அதில் நூல், பஞ்சு பேல்களை அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இன்று அதிகாலை 2 மணியளவில் மில்லின் குடோனில் இருந்து கரும்புகை வந்தது. இதனை இரவு வேலைக்கு வந்த தொழிலாளர்கள் பார்த்தனர்.
உடனடியாக நிர்வாகத்தினருக்கு இதுபற்றி தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு வண்டிகள் வருவதற்குள் தீ மள மளவென்று குடோன் முழுவதும் பரவத் தொடங்கியது. இதனால் ஜன்னல் கண்ணாடிகள் வெடித்து சிதறியது. சுவரிலும் விரிசல் ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் ரூ. 5 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications