சட்டசபைக் கட்டடத்தை கட்டி முடிக்காமல் பட்ஜெட் கூட்டத் தொடர் கூடாது - டிராபிக் ராமசாமி வழக்கு
சென்னை: புதிய சட்டசபைக் கட்டத்தை முழுமையாக கட்டி முடித்து அதற்குரிய சான்றிதழ் பெறப்படாமல், அங்கு பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்தக் கூடாது என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஏற்கனவே, புதிய சட்டசபைக் கட்டத்தை முழுமையாக கட்ட வேண்டும். அதை தற்போது வேகம் வேகமாக கட்டி வருவதால் அதன் ஸ்திரத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது. எனவே திறப்பு விழாவை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் இதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இந்த நிலையில் இன்னொரு புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்திருப்பவர் பிரபல சமூக சேவகர் டிராபிக் ராமசாமி.
இதுகுறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ.450 கோடியில் புதிய சட்டப்பேரவை வளாகம் அவசர, அவசரமாகக் கட்டப்பட்டு வருகிறது.
சுமார் 9 லட்சம் சதுர அடியில் உருவாகும் இந்த வளாகம், முழுமையாக முடிக்கப்படாமலேயே திறக்கப்பட உள்ளது. இதில், பட்ஜெட் கூட்டத் தொடரும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமையில் சட்டப்பேரவை கட்டுமானப் பணிகளின் போது ஏற்பட்ட விபத்தில் 12 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இந்த சூழலில், இவ்வளாகத்தை முழுமையாகக் கட்டி முடிக்காமல் அதில் பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்துவது பாதுகாப்பானது அல்ல.
அடுக்குமாடி கட்டடங்கள் தொடர்பான விதிகளின் படி, சட்டப்பேரவை வளாகத்தை முழுமையாகக் கட்டி முடித்ததற்கான சான்றிதழைப் பெறாமல், இந்தக் கட்டடத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
கட்டி முடித்ததற்கான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களையும் நீதின்றத்தில் தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார் ராமசாமி.
விரைவில் இந்த மனு பரிசீலனைக்கு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications