பென்னாகரம்: அதிமுக வேட்பாளரை ஆதரித்து 2 நாள் சிபிஎம் பிரசாரம்
சென்னை: பென்னாகரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து 2 நாள் பிரச்சாரத்தில் ஈடுபட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பென்னாகரம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், வரும் 20ம் தேதி பாலபாரதி எம்எல்ஏ எஸ்.கே.மகேந்திரன் எம்எல்ஏ, 24ம் தேதி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்ளும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பிற தீர்மானங்கள்:
மாற்றுத் திறனுடையோருக்கு என தனியான அமைச்சரகம், பொது அடையாள அட்டை உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 20ம் தேதி டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெறும்.
மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவது என்ற முதல்வரின் அறிவிப்பை உடனடியாக செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறையில் உள்ள வேளாண்மை ஆய்வு மையத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.2 கோடி நிதியை கொண்டு, திருப்பதி சாரத்தில் அமைக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
தமிழக அரசு இந்த இடமாற்ற முடிவை கைவிட்டு, வளர்ச்சித் திட்டப் பணிகளை பேச்சிப்பாறை ஆய்வு மையத்திலேயே செய்ய வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications