அணு உலை விபத்து மசோதா: 'டிமிக்கி' அடித்த எம்.பிக்கள்- சோனியா கடும் கோபம்
டெல்லி: அணு உலை விபத்து இழப்பீடு மசோதாவை தாக்கல் செய்ய அரசுத் திட்டமிட்டிருந்த நிலையில், லோக்சபாவுக்கே வராமல் டிமிக்கி அடித்த 35 காங்கிரஸ் எம்.பிக்கள் மீது சோனியா காந்தி கடும் கோபமாக உள்ளார்.
மசோதாவை தாக்கல் செய்யாமல் அரசு பின் வாங்கியதற்கு சொந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் கணிசமானோரே வராமல் டபாய்த்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த 35 பேரிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க சோனியா திட்டமிட்டுள்ளார்.
திங்கள்கிழமையன்று அணு உலை விபத்து இழப்பீடு மசோதாவைத் தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகளுக்குப் பயந்து இதை கடைசி நேரத்தில் ஒத்திப் போட்டு விட்டது.
ஆனால் அன்றைய தினம் 35 காங்கிரஸ் எம்.பிக்கள் வராமல் இருந்ததும் கூட இந்த ஒத்திவைப்புக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. சொந்தக் கட்சியைச் சேர்ந்த கணிசமான எம்.பிக்களே மசோதா தாக்கல் தினத்தன்று வராமல் போய் விட்டனர் என்ற அவப் பெயர் காங்கிரஸுக்கு வந்து விடக் கூடாது என்பதற்காகவே மசோதாவை கடைசி நேரத்தில் அரசு ஒத்திப் போட்டு விட்டதாக கூறப்படுகிறது.
கட்சிக் கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தும், அவைக்கு வராமல் போயிருந்த 35 எம்.பிக்கள் மீதும் சோனியா காந்தி கடும் கோபமாக இருக்கிறாராம். அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் அவர் முடிவு செய்துள்ளாராம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications