எம்பி தொகுதிகளை 814 ஆக உயர்த்திய பின் மகளிருக்கு ஒதுக்கீடு தரலாம்! - பஸ்வானின் பலே யோசனை
இப்போதுள்ள எம்பிக்களின் எண்ணிக்கையை வைத்துக் கொண்டு பெண்களுக்கு இட ஒதுக்கீடு தருவது சரியல்ல. வேண்டுமானால் எம்பிக்களின் எண்ணிக்கையை 814 ஆக உயர்த்தி அதில் ஒதுக்கீடு செய்யலாம் என்ற புது ரூட்டை அறிவித்துள்ளார் ராம்விலாஸ் பஸ்வான்.
இதுகுறித்து லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானிடம் நேற்று கேட்கப்பட்டபோது அவர் அளித்த பதில்:
பெண்களுக்கு இட ஒதுக்கீடு தருவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் இப்போது உள்ள எம்.பி.க்கள் எண்ணிக்கையை வைத்துக் கொண்டே பெண்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது சரிவராது. பல பிரச்சினைகளைத்தான் ஏற்படுத்தும்.
அடுத்த தடவை நமது தொகுதி பெண்கள் தொகுதியாக மாறி விடுமோ என்ற பயத்தில் எந்த எம்.பி.யும் தங்கள் தொகுதிக்கு செய்ய வேண்டிய பணிகளைக் கூட
சரியாக செய்யாமல் போகும் அபாயம் உள்ளது.
எனவே இப்போதுள்ள தொகுதி எண்ணிக்கையை உயர்த்தி அதில் இருந்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தற்போது 543 எம்.பி.க்கள் உள்ளனர். இது முந்தைய மக்கள் தொகை அடிப்படையில் இருந்து உருவாக்கப்பட்டது.
ஆனால் இப்போது இந்திய மக்கள் தொகை 120 கோடியாக உயர்ந்து விட்டது. நிர்வாக வசதிக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் மாநிலங்களின் எண்ணிக்கையை உயர்த்தும் அரசு, எம்பிக்கள் எண்ணிக்கையையும் உயர்த்தலாம். இதற்கு தகுந்த மாதிரி தொகுதி எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். அதாவது 543-ல் இருந்து 814 தொகுதியாக உயர்த்த வேண்டும்.
அதில் இருந்து பெண்கள், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர், மற்றும் நலிவடைந்த பிரிவினர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்..." என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications