பென்னாகரத்தில் நாளை கருணாநிதி பிரச்சாரம்
பென்னாகரம்: பென்னாகரம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் இன்பசேகரன் 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இடைத் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் களத்தில் சூறாவளியாக சுழன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி பென்னாகரத்தில் நாளை பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். நாளை மாலை பெண்ணாகரம் அண்ணா சிலை அருகே நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் முதல்வர் பேசுகிறார்.
இந் நிலையில் பென்னாகரம் தொகுதியில் பிரச்சாரக் கூட்டப்களில் பேசிய ஸ்டாலின் கூறுகையி்ல்,
தேர்தலின் போது மட்டும் நாங்கள் உங்களை சந்திக்க வரவில்லை. எந்த நேரத்தில் என்ன பிரச்சனைகள் என்றாலும் அதை தீர்க்க நாங்கள் ஓடி வருவோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
ஆனால், ஜெயலலிதா தேர்தலுக்கு தேர்தல் மட்டும் மக்களை சந்தித்து விட்டு, மற்ற நேரங்களில் கொடநாடு சென்று ஓய்வு எடுத்துக் கொள்வார்.
கடந்த இடைத் தேர்தல்களில் திமுக 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், பென்னாகரம் இடைத் தேர்தலில் முதல்வர் கருணாநிதி பிரச்சாரம் செய்ய வருவதால், திமுக வேட்பாளர் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும், வெற்றி பெறுவார்.
திமுகவை எதிர்த்து தேர்தலில் நிற்கும் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள். இந்த புதிய வரலாறை நீங்கள் படைக்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.
கைவினைஞர் முன்னேற்றக் கழகம் ஆதரவு:
இந் நிலையில் இந்த இடைத் தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரிப்பதாக அகில இந்திய கைவினைஞர் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications