10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஏன் 'பொன்' நகரமாக மாற்றவில்லை: விஜயகாந்த்

பென்னாகரம் தொகுதியில் தனது கட்சியின் வேட்பாளர் காவேரிவர்மனை பல்வேறு இடங்களில் கடும் வெயிலில் திறந்த வேனில் நின்றபடி பேசிய விஜய்காந்த் கூறுகையில்,
தேர்தல் பிரசாரத்துக்கு வந்த ஜெயலலிதா, பென்னாகரத்தை 'பொன்' நகரமாக மாற்றுவேன் என்று கூறியிருக்கிறார்.
10 ஆண்டுகால ஆட்சியில் பொன் நகரமாக மாற்றாமல், ஏன் 'தகரமாக' வைத்திருந்தார்?. பஞ்சம் பிழைக்க சென்றவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருந்தால் அவர்கள் ஏன் வெளியூர் போகின்றனர்.
இதுவரை எதுவும் செய்யாதவர்கள் தான் மீண்டும் எல்லாம் செய்கிறோம் என்று பொய் சொல்கின்றனர்.தேர்தலில் 50 கோடியை செலவு செய்தவர்கள், 500 கோடியை சம்பாதிக்கின்றனர்.
27ம் தேதி வரை பென்னாகரம் தொகுதி மக்களின் காலை கழுவி பூஜை செய்ய சொன்னாலும் செய்வார்கள். அதன் பிறகு, எல்லாமே பழைய குருடி கதவை திறடி என்ற கதையாகி விடும்.
காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்னையை தீர்க்க முடியாத திமுக அரசால் தமிழகம் பின்னுக்கு தள்ளப்பட்டு, வாழ்வாதரங்கள் அழிந்து வருகின்றன.
மக்களின் வரிப்பணத்தில் இலவசத் திட்டங்களை அறிவித்துவிட்டு அதில் பல்வேறு ஊழல்களை செய்து வருகிறது திமுக. அந்த ஊழல் பணத்தை வைத்துக்கொண்டு தேர்தலில் வாக்காளர்களை விலைக்கு வாங்க நினைக்கிறது.
மேலும் திமுகவினர் போலீஸாரின் அதிகாரத்தை கையில் வைத்துகொண்டு தேமுதிக தொண்டர்களை மிரட்டி வருகின்றனர். இத்தேர்தலில் அவர்களுக்கு வாக்காளர்கள் பாடம் கற்பிக்க வேண்டும்.
மக்கள் மீது அக்கறை இல்லாத பாமக, சாதி பெயரைச் சொல்லி வாக்கு சேகரித்து வருகிறது.
உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன், இந்த முறை முரசு சின்னத்தில் ஓட்டுப்போட்டு எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications