வாகன சோதனையின்போது லாரி மோதி வணிகவரி ஊழியர் பலி
சென்னை: வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வணிக வரித்துறை ஊழியர் லாரி மோதி பலியானார்.
பெரம்பூரை சேர்ந்தவர் குமார். 57 வயதான இவர் வணிக வரித்துறையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு 11.15 மணிக்கு அண்ணாநகர் பேருந்து பணிமனை எதிரே குமார் உள்ளிட்ட வணிக வரித்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
சோதனையின் போது அதிகாரிகளுடன் குமார் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இரும்பு லோடு ஏற்றிய லாரியை அதிகாரிகள் மறித்தனர்.
அந்த லாரி தறி கெட்டு ஓடி ஊழியர் குமார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே குமார் பரிதாபமாக இறந்தார். லாரியை டிரைவர் நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications