தமிழ் செம்மொழி மாநாட்டில் கள் விற்கும் போராட்டம் - கள் இயக்கம் அறிவிப்பு
சேலம்: கோவையில் நடக்கும் தமிழ் செம்மொழி மாநாட்டில், கள் விற்கும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில், தமிழ்நாடு கள் இயக்க ஆலோசனை கூட்டம் ஆடிட்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.
அப்போது, தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கள் என்பது மது வகையைச் சேர்ந்தது அல்ல. அது உணவின் ஒரு பகுதி தான். இதை அரசு அறிவிக்க முன்வர வேண்டும்.
கள் இறக்குவது என்பது இந்திய அரசியல் சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உரிமை. இந்த உரிமையை எந்தவொரு மாநில அரசும் பறிக்க கூடாது.
வரும் ஜூன் 23ம் தேதி முதல் 27 ம் தேதி வரை கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுகின்றது. இந்த மாநாட்டு வளாகத்தில் தமிழ் மண்ணின் பானமான கள் விற்கப்படும்.
தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் செம்மொழி மாநாட்டில் கள்ளுக்கு விதித்துள்ள தடையை நீக்க வேண்டி, மாநாட்டு வளாகத்தில் கள் விற்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என்றார்.












Click it and Unblock the Notifications