திண்டுக்கல் பட்டாசு குடோனில் பயங்கர தீ - உரிமையாளர் பலி - 8 பேர் காயம்
திண்டுக்கல்: திண்டுக்கலில்ல உள்ள பட்டாசு குடோன் ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் அதன் உரிமையாளர் உடல் சிதறி பலியானார். 8 பேர் படுகாயமடைந்தனர். நான்கு கட்டடங்கள் தரைமட்டமாகின.
திண்டுக்கல் மேற்கு ரத வீதியில் வானவெடிகளை இருப்பு வைத்திருக்கும் குடோன் உள்ளது. இங்கு பெருமளவிலான வானவெடிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இன்று காலை, அங்கு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
இதில் இருப்பு வைக்கப்பட்டிருந்த வான வெடிகள் பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறின. இதில் அந்தக் கட்டடமே தரைமட்டமானது. அக்கம் பக்கத்தில் உள்ள கட்டங்களும் பாதிப்படைந்தன. மொத்தம் நான்கு கட்டடங்கள் சேதமடைந்தன.
குடோனில் விபத்து ஏற்பட்டபோது இருந்த அதன் உரிமையாளர் தனசேகரன் உடல் கருகி, சிதறி பலியானார். மேலும் 8 பேர் படுகாயமடந்தனர்.
இவர்களை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போயுள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications