நாட்டில் மீண்டும் புரட்சிகர திட்டங்கள் நிறைவேறும்- ப.சிதம்பரம்
சிவகங்கை: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் மூலம் மீண்டும் பல்வேறு புரட்சிகரமான திட்டங்கள் நிறைவேற உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சுண்ணாம்பிருப்பில் புதிய சமுதாயத் கூடத்தை திறந்து வைத்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது,
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் மூலம் மீண்டும் பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை நிறைவேற்ற உள்ளோம்.
அதில், உணவுக்கு உறுதி திட்டம், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு கிலோ ரூ 3 வீதம் மாதந் தோறும் 25 கிலோ அரிசி, அனைவருக்கும் கல்வி போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை அளிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு நிதி அமைச்சருக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தேன். அதன் காரணமாக, ஒவ்வொரு பஞ்சாயத்திலும் சமுதாயக் கூடம் கட்டும் திட்டம் நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.
நிறைகள் தான் எங்களது ஆட்சியில் அதிகமாக உள்ளது, இருப்பினும் குறைகள் இருந்தால் அதை என்னிடம் கூறுங்கள். அதையும் நிறைவேற்றி வைக்க தயாராக உள்ளோம்.
நாடு முழுவதும் மாணவ, மாணவிகளுக்கு 10 ம் வகுப்பு வரை கண்டிப்பாக இலவச கல்வி வழங்க உத்தேசித்து உள்ளோம். அதே போல் தி.மு.க.ஆட்சியில் கல்லூரி வரை கட்டணம் இல்லாத கல்வி, கரும்பு டன்னுக்கு ரூ.2ஆயிரம், திருமணத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு என்று அடுக்கடுக்கான சாதனைகளை பட்டியலிட்டு சொல்லலாம் என்றார் ப.சிதம்பரம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications