லெனின் குறித்த விசாரணையில் கர்நாடக போலீஸ்!

நடிகை ரஞ்சிதாவுடன் அந்தரங்க கோலத்தில் நித்தியானந்தா இருந்த காட்சிகள் வீடியோ படமாக வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இருவரும் தலைமறைவாகி விட்டனர்.
இவர்கள் இருவரும் தனிமையில் இருந்த காட்சிகளை படம் பிடித்தவரான லெனின் கருப்பன், சர்ச்சை வெடித்த சில நாட்களில் சென்னைக்கு வந்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து மேலும் ஒரு சிடியைக் கொடுத்து விட்டு தலைமறைவாகி விட்டார்.
தற்போது நித்தியானந்தா தொடர்பான வழக்குகளை கர்நாடக போலீஸார் விசாரித்து வருகின்றனர். அந்த மாநில சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு யோகப்பா, மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு சேலம் ஆத்தூரில் உள்ள லெனின் குடும்பத்தாரிடம் சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். லெனினின் அண்ணன் குணசேகரன், அண்ணி ராணி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, கடைசியாக லெனின் ஆத்தூருக்கு எப்போது வந்தார்? நித்யானந்தா விவகாரத்துக்கு பின்னர் உங்களை தொடர்பு கொண்டு பேசினாரா? என்பது போன்ற கேள்விகளை போலீசார் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த லெனின் உறவினர்கள் 19 வயதில் இந்த ஊரை விட்டு சென்ற லெனின் 2 முறைதான் இங்கு வந்துள்ளார். எங்களுடன் லெனின் தற்போது தொடர்பில் இல்லை என்று தெரிவித்தனர்.
இருப்பினும் 3 நாட்கள் வரை அங்கு முகாமிட்டு லெனின் பற்றிய தகவல்களை பெங்களூர் போலீசார் திரட்டினர். நித்யானந்தா விவகாரம் பூதாகரமாக கிளம்பிய நாளில் இருந்து சீடர் லெனின் சென்னையில் தங்கியுள்ளார். இங்கு அவருக்கு நெருக்கமான நண்பர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களின் ஆதரவுடன் தொடர்ந்து சென்னையில் இருக்கும் சீடர் லெனினிடம் நேரடியாக விசாரணை நடத்த சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக விரைவில் அவர்கள் சென்னை வருகிறார்கள். இங்கு மத்திய குற்றப்பிரிவு போலீசுடன் கலந்து ஆலோசிக்கும் பெங்களூர் போலீசார் லெனின் தொடர்பாவும் சாமியார் தொடர்பாகவும், மேலும் பல தகவல்களை திரட்டுகிறார்கள்.
இந்த நிலையில் நித்தியானந்தா குறித்து தகவல் தெரிந்தோர் அதுகுறித்து 080-22381894, 9480800123 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கர்நாடக சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு யோகப்பா கூறியுள்ளார்.
மேலும், சி.ஐ.டி. போலீஸ், கார்ல்டன் ஹவுஸ், பேலஸ் ரோடு, பெங்களூர் என்ற முகவரிக்கும் நேரில் வந்து தெரிவிக்கலாம் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications