சென்னையில் இரவில் நிலநடுக்கம் - பீதியில் மூழ்கிய மக்கள்

சென்னையில் நேற்று இரவு நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், கொட்டிவாக்கம், ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் 10.30 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இரவு நேரம் என்பதால் மக்கள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் உள்ளிட்டவை அசைந்ததாக பூகம்பத்தை உணர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
அந்தமான் தீவுப் பகுதியில் நேற்று இரவு பத்தரை மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் விளைவே சென்னையிலும் பூகம்பத்தை மக்கள் உணர்ந்துள்ளனர். அந்தமான் பூகம்பத்தின் அளவு 6.9 ரிக்டராக தெரிய வந்துள்ளது.
சென்னையில் உணரப்பட்ட பூகம்பம் வெறும் 3 விநாடிகள்தான் நீடித்தது. நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்திலும் பூகம்பத்தை உணர்ந்துள்ளனர். சென்னை நகரின் பல பகுதிகளில் பூகம்பம் உணரப்பட்டாலும் கூட இதனால் எந்தவித பாதிப்பும் இல்லை.
புவனேஸ்வர், கட்டாக் தவிர ஜெகத்சிங்பூர், ஜஜ்பூர் உள்ளிட்ட நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதேபோல மியான்மர், ஹாங்காங்கிலும் கூட நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஆனால் அந்தமானில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. 2 பேர் காயமடைந்துள்ளனர். வேரு பெரிய சேதம் எதுவும் இல்லை. கடலில் பூமி அதிர்ச்சியின் மையம் இருந்தாலும் கூட சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications