வி.சி கொடிகம்பம் சாய்ப்பு - ஜி.கே.மணி மீதான வழக்கு திடீர் வாஸ்!
சென்னை: சேலம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் வெட்டப்பட்ட சம்பவத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி மீதான வழக்கு திடீரென கைவிடப்பட்டது.
சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கருங்கல்லூரில் காந்திநகர் என்ற பகுதி உள்ளது. இங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் வைக்கப்பட்டிருந்தது.
கடந்த மாதம் 28ம் தேதி இந்த கொடி கம்பம் நள்ளிரவில் வெட்டப்பட்டு அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கொளத்தூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் தமிழ்மணி கொளத்தூர் போலீசில் புகார் செய்தார்.
அப்புகாரில் பாமக தலைவர் ஜி.கே.மணியின் தூண்டுதலின் பேரில் கொடிகம்பம் அகற்றப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. புகாரின் பேரில் கொளத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் ஜி.கே.மணிக்கு எதிரான மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதாக சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டிஜிபி ராதாகிருஷ்ணன் இன்று செய்தி வெளியிட்டுள்ளார்.
கொளத்தூர் போலீசார் புலன் விசாரணை நடத்தியதில், ஜி.கே மணிக்கு எதிரான புகார் உண்மைக்கு மாறானது என்று தெரிய வந்ததால் இந்த வழக்கு கைவிடப்பட்டதாக கூடுதல் டிஜிபி வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications