ப.சிதம்பரம் வார்த்தையை அளந்து பேச வேண்டும்: புத்ததேவ் சீற்றம்
கோல்கத்தா: உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி கடுமையாக கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் நக்சல் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்றார்.
அப்போது லால்கரில் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு வெகுவாக சீர்குலைந்திருந்திருப்பதாக கூறினார்.
சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வருவது முதல்வர் புத்ததேவின் கையில் தான் உள்ளதை என்பதை குறிப்பிடுவதற்காக 'பக் ஸ்டாப்ஸ் வித்' என்ற வார்த்தையை சிதம்பரம் பேட்டியின் போது பயன்படுத்தினார்.
இதனால் எரிச்சல் அடைந்துள்ள முதல்வர் புத்ததேவ், 'சிதம்பரம் வார்த்தையை அளந்து பேச வேண்டும். அவர் பயன்படுத்துகிற வார்த்தை அரசியல்வாதிகளுக்கானது அல்ல. அது ஒரு கொச்சைத்தனமான வார்த்தை.
என் கடமை எது என எனக்குத் தெரியும். நான் என் வேலையை பார்க்கிறேன். அவர் அவருடைய வேலையை பார்க்கட்டும்.
அவர் உள்துறை அமைச்சர் என்ற பதவியில் இருந்து கொண்டு ஒரு மாநில அரசின் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து குறை கூறவும், கருத்து கூறவும் அதிகாரம் பெற்றிருக்கிறார்.
ஆனால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது நான் தான். உண்மையில் அவருக்கு அக்கறை இருந்தால் இங்கு பிரச்னை செய்யும் எதிர்க்கட்சிகளிடம் சொல்லி மாநில அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு அவர் கேட்டுக்கொள்ள வேண்டும்' என வெடித்துத் தள்ளினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications