கிஷன்ஜி காலில் குண்டுக்காயம் இருந்ததாக கூறுகிறார் பிடிபட்ட 'டாக்டர்'
கொல்கத்தா: மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜிக்கு காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டிருந்ததாகவும், அதை சரி செய்து அவரை அனுப்பி வைத்ததாகவும் போலீஸாரிடம் பிடிபட்ட ஒருவர் கூறியுள்ளார்.
அவரது பெயர் ஜவஹர்லால் மகதோ. தன்னைத் தானே டாக்டர் என்று அவர் கூறிக் கொள்கிறார். லால்கர் பகுதியைச் சேர்ந்தவர்.
3 நாட்களுக்கு முன்பு லால்கரில் வைத்து மகதோவை போலீஸார் வளைத்துப் பிடித்தனர். அவர் போலீஸாரிடம் கூறுகையில், கிஷன்ஜியின் இடது காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டிருந்தது. ஆனால் குண்டு உள்ளேயே தங்கி விடவில்லை. மாறாக, காலைத் துளைத்துக் கொண்டு வெளியேறி விட்டதால், பெரிய ஆபத்து ஏதும் இல்லை.
இதையடுத்து அந்த இடத்தை சுத்தப்படுத்தி மருந்து போட்டு விட்டேன். தற்போது கிஷன்ஜி நலமாக இருக்கிறார் என்று கூறியுள்ளார் மகதோ.
இதுகுறித்து மேற்கு மிதினாப்பூர் எஸ்.பி. மனோஜ் குமார் வர்மா கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். அதேசமயம், பிடிபட்ட நபரின் பெயர் ஜவஹர்லால் மகதோ. தன்னைத் தானே டாக்டர் என்று கூறிக் கொள்கிறார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது என்று மட்டும் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications