மேற்கு தொடர்ச்சி மலையில் மாவோயிஸ்ட் ஊடுருவலா? – போலீசார் சோதனை
நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கியூ பிராஞ்ச் போலீசர் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முதல் தேவிபட்டிணம் வரை மேற்கு தொடர்ச்சி மலை பரந்து விரிந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதிகளான இப்பகுதியில் அடிக்கடி அதிரடி படை போலீசார் திடீர் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர்.
இங்கு ஆந்திரா, சட்டீஸ்கர் மாநிலங்களிலிருந்து ஊடுறுவியுள்ள மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் உள்ளதா என்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள், சிறப்பு படை போலீசார் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 76 போலீசார் பலியானார்கள். இதனை தொடர்ந்து தமிழக டிஜிபி தமிழக-கேரள-ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் உள்ள சோதனை சாவடிகள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை கண்காணிக்க உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து புளியரை, தேனி, பாபநாசம், களக்காடு உள்ளிட்ட பல்வேறு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கியூ பிராஞ்ச் போலீசார் வனப்பகுதிகளுக்கு சென்று ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியி்ல் சில மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாகவும், தாடியோடு பேண்ட், சட்டை அணிந்த நபர்கள் வனப்பகுதியில் நடமாடுவதாகவும், ஆடு, மாடு மேய்ப்பவர்களை கண்டதும் ஓடி ஓளிவதுமாக இருப்பதாகவும் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து நேற்று மாலை முதல் உளவுத்துறை போலீசார், கியூ பிராஞ்ச் போலீசார் புளியங்குடி வனப்பகுதியினுள் சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் சென்ற பகுதியில் இந்தி பேசும் வடநாட்டவர்கள் சிலர் தங்கி இருப்பதை கண்டு அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் பேசும் மொழி தெரியாததால் உளவுத்துறை போலீசார் அவர்களை வீடியோவில் பதிவு செய்து வருகின்றனர்.
புளியங்குடி வனப்பகுதியில் இருந்து கேரள மாநிலத்திற்கு எளிதாக சென்று விடலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் மாவோயிஸ்ட்டுகள், தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளிகளை கடத்தலாம் என்றும் உளவு துறைக்கு ஏற்கனவே தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தென்காசி நாடாளுமன்ற எம்பி லிங்கம் வாசுதேவநல்லூர் செண்பகவல்லி நீர்தேக்க பகுதிக்கு சென்று அணையில் உடைப்பு பகுதியை பார்வையிட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
செண்பகவல்லி நீர்தேக்க பகுதிக்கு அரசியல் முக்கியத்துவம கிடைத்து வரும் நிலையில் முக்கிய புள்ளிகள் அப்பகுதிக்கு செல்ல வாய்ப்புள்ளதாலும், தற்போது மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதாக கூறப்படும் நிலையில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications