மர்ம கும்பல் நடமாட்டம்: புளியங்குடி வனப்பகுதியில் அதிரடிப்படை தேடுதல் வேட்டை
புளியங்குடி: புளியங்குடி மலைப்பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து கியூ பிராஞ்ச் போலீசார் தமிழக - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் ஊடுவலை தடுக்க மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக தெரியவந்த தகவலால், கண்காணாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் அதிரடிபடை எஸ்பி ஈஸ்வரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தாடியுடன் 4 பேர் சுற்றி திரிந்தனர். ஆடு, மாடு மேய்ப்பவர்களை கண்டதும் வனப்பகுதிக்குள் சென்று மறைந்து கொண்டனர். இச்சம்பவத்தால் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
மேலும் கொல்கத்தாவைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் புளியங்குடி அருகே உள்ள செங்கல் சூளையில் தங்கியிருப்பதாக உளவுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஏற்கனவே இவர்களில் இருவர் கோட்டைமலை பழங்குடியின மக்கள் வசிக்கும் இருப்பிடம் வரை நேற்று முன்தினம் சுற்றி திரிந்துள்ளனர்.
இதையடுத்து சிறப்பு அதிரடி படை போலீசார் கியூ பிரிவு போலீசார் ஆகியோர் வனத்துறையினர் உதவியுடன் கோட்டைமலைப்பகுதியில் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications