2 நாள் அணு ஆயுதப் பாதுகாப்பு மாநாடு இன்று தொடக்கம்
வாஷிங்டன்: 2 நாள் அணு ஆயுதப் பாதுகாப்பு மாநாடு அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் இன்று தொடங்குகிறது. 47 நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் ஏற்பாட்டின் பேரில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இன்று தொடங்கி நாளை வரை இது நடைபெறுகிறது.
இதில் உலகத் தலைவர்கள் 47 பேர் தலைமையிலான குழு பங்கேற்கிறது. அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்குப் போய் விடாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து இந்த மாநாட்டில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
மேலும் மாநாட்டின் நிறைவில் உடன்படிக்கை ஒன்றும் கையெழுத்தாகவுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டுக்கு இஸ்ரேலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த்து. ஆனால் இஸ்ரேல் மாநாட்டுக்கு வரவில்லை. வ்நதால், முஸ்லீம் நாடுகள் இஸ்ரேல் அணு ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து நெருக்கடி தரலாம் என்பதால் இஸ்ரேல் நைசாக நழுவி விட்டது.
இந்த மாநாட்டில் அல் கொய்தா உள்ளிட்ட தீவிரவாதிகளின் கைகளுக்கு அணு ஆயுதங்கள் போய் விடாமல் தடுப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் பல்வேறு உலக நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் கலந்து கொள்ளும் மிகப் பெரிய மாநாடு ஒன்று நடைபெறுவது இதுதான் முதல் முறை என்று கூறப்படுவதால் மாநாட்டுக்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போலந்து அதிபருக்கு இரங்கல்
மாநாட்டின் தொடக்கத்தில் விமான விபத்தில் பலியான போலந்து அதிபர் லே கசின்ஸ்கிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 2 நிமிடம் மெளன அஞ்சலி அனுஷ்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications