சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கைதி தற்கொலை முயற்சி
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கைதி ஒருவர் பிளேடால் தனது கழுத்தை அறுத்துத் தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்தக் கைதி தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வடபழனியில் வாட்ச்மேன் கொலை செய்யப்பட்ட வழக்கில் நாகூர் மீரான் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் மீதான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள 3வது விரைவு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இன்று இந்த வழக்கில் நீதிபதி சேதுமாதவன் தீர்ப்பளித்தார். அப்போது நாகூர் மீரான் உள்ளிட்ட ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து அவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து ஐந்து பேரையும் போலீஸார் வெளியில் அழைத்து வந்தார். அப்போது திடீரென நாகூர் மீரான் தன்னிடமிருந்த பிளேடை எடுத்து கழுத்தை கரகரவென அறுத்துள்ளார்.
இதைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரிடமிருந்த பிளேடைப் பறித்தனர். அதற்குள் பெருமளவில் ரத்தம் வெளியேறி மயக்கமடைந்தார் நாகூர் மீரான்.
அவரை உடனடியாக அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மற்ற நான்கு கைதிகளும் பாதுகாப்புடன் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
நாகூர் மீரான் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் உயர்நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications