சீனாவில் பயங்கர நிலநடுக்கம்- 300 பேர் பலி

ரிக்டர் அளவில் 7.1 என பதிவாகியிருந்த இந்த சக்தி வாய்ந்த பூகம்பத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இந்த இடிபாடுகளில் ஏராளமான மக்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
காலையில் மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை அடிப்படையில், இந்த பூகம்பத்தால் குறைந்தது 67 பேர் பலியாகி இருக்கக் கூடும் என கூறப்பட்டடது.
ஆனால் இதன் பிறகு இடிபாடுகளை தோண்ட தோண்ட சடலங்கள் ஏராளமாக கண்டெடுக்கப்பட்டன.
இதுவரை 300 பேரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சுமார் 8 ஆயிரம் பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர்.
உயிர்சேதத்தைப் போலவே இந்த பூகம்பத்தில் ஏராளமான பொருட்சேதங்களும் ஏற்பட்டிருக்கும் எனத் தெரிகிறது.
ஏராளமான கட்டிடங்கள் முற்றிலுமாக சிதைந்து இடிந்து விழுந்து கிடக்கின்றன.
குவின்காய் மாகாணத்தின் ஜூகூ நகரில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள மலைப்பகுதியை மையமாகக் கொண்டு பூகம்பம் ஏற்பட்டது.
இன்று புதன்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7.49 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சீன பூகம்ப ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூகம்ப மையப் பகுதிக்கு அருகே அமைந்துள்ள இடங்களில் 85 சதவீத வீடுகள் இடிந்து விட்டதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோர் தெரிவிக்கின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications