மோடியுடன் மோத வேண்டாம்-சசி தரூருக்கு தாவூத் கும்பல் மிரட்டல்

தாவூத் கும்பலைச் சேர்ந்த ஷகீல் என்பவரிடமிருந்து தரூருக்கு வந்த எஸ்எம்எஸ்சில் லலித் மோடியுடன் மோத வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உள்துறை அமைச்சகத்திடம் புகார் செய்துள்ளதாக சசி தரூரின் சிறப்பு அதிகாரியான ஜேக்கப் ஜோசப் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இது குறித்து விசாரிக்க இன்டலிஜென்ஸ் பீரோ அமைப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் கொச்சி அணியை வாங்கிய ரெண்டஸ்வஸ் நிறுவனத்துடன் தரூருக்குத் தொடர்பு இருப்பதாக ஆரம்பத்தில் அரசல் புரசலாக பேசப்பட்டது. மோடியுடனும் தரூர் நேரடியாகப் பேசி அணியை ரெண்டஸ்வஸுக்கே தருமாறு நிர்ப்பந்தித்தாகவும் கூறப்பட்டது.
ரெண்டஸ்வஸ் நிறுவனத்தில் தரூருக்கு நேரடியாக தொடர்பு இல்லை என்ற போதிலும் அவர் தற்போது காதலித்து வரும் காஷ்மீரைச் சேர்ந்த சுனந்தா புஷ்கர் என்பவருக்கு நேரடிப் பங்கு உள்ளது.
இந்தத் தகவலை ஐபிஎல் தலைவர் லலித் மோடியே ட்விட்டர் மூலம் வெளியிட்டதையடுத்து அவருக்கும் சசி தரூருக்கும் இடையே மோதல் வெடித்தது.
மோடி தனது ட்விட்டர் செய்தியில் கூறியுள்ள தகவலின்படி ரெண்டஸ்வஸ் நிறுவனத்தில் கிசன், சைலேந்தர் கெய்க்வாட், புஷ்பா கெய்க்வாட், சுனந்தா புஷ்கர், பூஜா குலாத்தி, ஜெயந்த் கோதல்வார், விஷ்ணு பிரசாத், சுந்தீப் அகர்வால் ஆகியோரை பங்குதாரராக் கொண்ட ரெண்டஸ்வஸ் நிறுவனத்திற்கு 25 சதவீத பங்குகள் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் ரெண்டஸ்வஸின் உரிமையாளர்கள் யார், அதன் பங்குதாரர்கள் யார் யார் என்பது குறித்த விவரங்களுக்குள் செல்ல வேண்டாம், அதை யாரிடமும் சொல்லவும் வேண்டும் என்று தான் மிரட்டப்பட்டதாகவும் மோடி கூறியுள்ளார். இவரை மிரட்டியது தரூர் தான் என்று தெரிகிறது.
இந்த விவகாரம் தரூரின் பதவிக்கே உலை வைக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ள நிலையில் இப்போது அவருக்கு தாவூத் ரூபத்திலும் மிரட்டல் வந்துள்ளது.
லலித் மோடியுடன் மோத வேண்டாம் என்று தரூரை தாவூத் கும்பல் மிரட்டியதாக சசி தரூர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications