பெண்ணின் கண்ணில் மண்ணை தூவி நகை கொள்ளை!: ஹெல்மெட் கொள்ளையர்கள் அட்டூழியம்!!
சென்னை: ஹெல்மெட் அணிந்தபடி வந்த இரு கொள்ளையர்கள் வீட்டில் தனியே இருந்த பெண்ணி்ன் கண்களில் மண்ணைத் தூவி நிலை குலைய வைத்து, அவரைக் கட்டிப் போட்டு வீட்டில் இருந்த 25 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை காமாட்சி நகரில் வசிக்கும் சாப்ட்வேர் என்ஜினியர் ராம ரெட்டி (26). இவரது மனைவி புஷ்பா (23).
நேற்று காலை புஷ்பா தனது குழந்தையுடன் தனியாக இருந்தார். அப்போது 2 பேர் ஹெல்மட் அணிந்தபடி வீட்டுக் கதவை தட்டினர்.
புஷ்பா கதவை திறந்துவுடன் ஒரு முகவரியைச் சொல்லி அது எங்குள்ளது என்று விசாரித்தனர். அவர்களுக்கு புஷ்பா பதில் சொல்லிக் கொண்டிருந்தபோதே திடீரென இருவரும் புஷ்பாவின் கண்ணில் மண்ணைத் தூவினர்.
இதில் நிலைகுலைந்த புஷ்பாவின் வாயைபொத்தி வீட்டுக்குள் இழுத்துச் சென்ற அந்த இருவரும் அவரது கை, கால்களை கட்டிப் போட்டுவிட்டு அவர் அணிந்திருந்த நகை, மற்றும் பீரோவில் இருந்த 25 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டனர்.
இதையடுத்து புஷ்பாவின் அலறல் சத்தத்தையும் அவரது குழந்தையின் அழுகை சத்தத்தையும் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை தனியார் ருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இரு கொள்ளையர்களும் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவர்களது முகத்தை புஷ்பாவால் பார்க்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications