தெ. ஆப்பிரிக்க மாடல் அழகிக்கு விசா தரக் கூடாது என்று கோரி தரூருடன் மோதிய மோடி

ஐபிஎல் கொச்சி அணி தொடர்பாக மோடிக்கும், தரூருக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே நடந்த சில ரகசிய சம்பவங்கள் காரணமாகவே இந்த மோதல் மூண்டிருக்குமோ என்று எண்ணத் தோன்றும் வகையில், நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன.
2009ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றன. அப்போது ஐபிஎல் 2 மிஸ் பாலிவுட் தென் ஆப்பிரிக்கா போட்டியை ஐபிஎல் நிர்வாகம் நடத்தியது. இதில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த காப்ரியெல்லா டிமெட்ரியேடஸும் பங்கு பெற்றார். இவருக்கும், லலித் மோடிக்கும் நட்பு மலர்ந்துள்ளது.
இதனால் தனக்கே வெற்றி என்ற பெரும் நம்பிக்கையுடன் இருந்தாராம் காப்ரியல்லா. தனக்குக் கிடைக்கும் பரிசுப் பணத்தைக் கூட அறக்கட்டளை ஒன்றுக்கு கொடுக்கவும் திட்டமிட்டிருந்தார். இவர்தான் வெல்வார் என்ற எதிர்பார்ப்பும் பரவலாக இருந்தது.
ஆனால் கடைசி நேரத்தில், கிழக்கு லண்டனைச் சேர்ந்த 35 வயதான டூன் கோஸாட்ஸ் வெற்றி பெற்றார். ஜென்னா கிளவுட் என்பவர் 2வது இடத்தைப் பிடித்தார்.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க இந்தியா வர ஆர்வமாக இருந்தார் காப்ரியெல்லா. ஆனால் அவருக்கு விசா தரக் கூடாது என்று தரூரிடம் இ மெயில் மூலம் பலமுறை கேட்டுக் கொண்டாராம் மோடி. ஆனால் இந்தக் கோரிக்கையை தரூரின் அலுவலகம் நிராகரித்து விட்டதாம்.
கடந்த பிப்ரவரி மாதத்துடன் காப்ரியெல்லாவின் விசா முடிவதாக இருந்தது.
காப்ரியெல்லாவுக்கு ஏன் விசா தரக் கூடாது என்று தரூரைக் கெஞ்சினார் மோடி என்பது தெரியவில்லை. தனது கோரிக்கையை தரூர் நிராகரித்த்தால், ஆத்திரத்தில் இருந்த மோடி, அதைத்தான் தற்போது கொச்சி ஐபிஎல் விவகாரத்தில் தரூர் மீது பாய்ந்துள்ளதா கருதப்படுகிறது.
காப்ரியெல்லா ஒரு கவர்ச்சிகரமான மாடல் அழகி ஆவார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாத எப்எச்எம் இதழுக்கு டூ பீஸ் உடையில் போஸ் கொடுத்திருந்தார். அதேபோல அந்த இதழின் அட்டைப் படத்திலும் அவர் இடம் பெற்றிருந்தார்
-
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications