சோனியா-பிரணாபுடன் தரூர் சந்திப்பு-ராஜினாமா இல்லை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய வெளியுறவு இணையமைச்சர் சசி தரூர் பதவி விலக வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. ஆனால், இந்தக் கோரிக்கையை தரூர் நிராகரித்துவிட்டார்.

ஐ.பி.எல்.லில் கொச்சி மற்றும் பூனா அணிகள் கடந்த மாதம் சேர்க்கப்பட்டன. இதில் கொச்சி அணியை ரூ.1,533 கோடி கொடுத்து ரெண்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வாங்கியது. அப்போதே சசி தரூருக்கு இதில் பங்கு இருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால், சசி தரூர் திருமணம் செய்ய உத்தேசித்துள்ளதாகக் கூறப்படும் காஷ்மீரைச் சேர்ந்த அழகுக் கலை நிபுணர் சுனந்தா புஷ்கருக்கு கொச்சி அணியில் 18 சதவீத பங்குகள் (சுமார் ரூ.70 கோடி) உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தரூருக்கும் ஐபிஎல் தலைவர் லலித் மோடிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

இந் நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஐபிஎல் கிரிக்கெட் விவகாரத்தில் சசி தரூர் தலையிட்டதும், ஈடுபட்டதும் மிக மோசமான முன்னுதாரணம். எனவே அவர் பதவி விலக வேண்டும். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விளையாட்டு போட்டியாக எடுத்துக் கொள்ள முடியாது.

இது தற்போது லாபம் கொழிக்கும் வர்த்தகமாக மாறிவிட்டது. இதில் அதிக அளவில் பணம் புழங்குகிறது. இதில் ஒரு மத்திய அமைச்சர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.

முதலில் சசி தரூர் பதவி விலகி, தற்போது கூறப்படும் குற்றச்சாட்டில் தனக்குத் தொடர்பில்லை என நிரூபிக்க வேண்டும்.

இவ்வளவு குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் வெளியான பிறகு, மத்திய அமைச்சராக தரூர் தொடர்வதை ஏற்க முடியாது. இது குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். தரூர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் வர்த்தக நடவடிக்கைகளில் அமைச்சர்கள் ஈடுபடலாமா என்பதை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு விளக்க வேண்டும்.

இந்த போட்டிகளில் புழங்கும் பணம் மற்றும் அது வரும் விதம், இதற்கு அளிக்கப்படும் வரிச் சலுகை ஆகியவை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே சசி தரூர் பதவி விலக வேண்டும் என்று பாஜக கோரி வருவதும் குறிப்பிடத்தக்கது.

பதவி நீக்கம் செய்ய பிருந்தா கோரிக்கை:

இந் நிலையில் நெல்லை வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிருந்தா காரத் நிருபர்களிடம் கூறுகையில்,

ஐபிஎல் போட்டிகள் வியாபாரமாகி விட்டன. இந்த வியாபார சர்சையில் சிக்கியுள்ள மத்திய இணை அமைச்சர் சசி தரூர் முதலில் பதவி நீக்கம் செய்ய வேண்டும். இதுகுறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும். விசாரணைக்கு பி்ன் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ராஜிநாமா செய்ய மாட்டேன்-சசி தரூர்:

இந் நிலையில் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன் என்று சசி தரூர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ராஜிநாமா செய்யும் அளவுக்கு நான் தவறு எதுவும் இழைக்கவில்லை. தவறிழைக்காத பட்சத்தில், நான் ராஜிநாமா செய்தால் மற்றவர்களின் கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவே ஆகிவிடும்.

எனவே, நான் ராஜிநாமா செய்ய மாட்டேன். காங்கிரசுக்கு தர்மசங்கடம் ஏற்படும் வகையிலும் நடந்து கொள்ள மாட்டேன். உள்நோக்கம் கொண்ட சில முதலாளிகளால் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன என்றார்.

முன்னதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை தரூர் சந்தித்தார். அப்போது தனது நிலையை அவர் விளக்கியதாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் அவர் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்தி்ப்பின்போது நாடாளுமன்றத்தில் சசி தரூர் தனது நிலையை விளக்கிப் பேசலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+