திறந்தவெளிப் பல்கலை பட்டம் பெற்றவர்களும் வக்கீலாகப் பணிபுரியலாம்! - உயர்நீதி மன்றம்
சென்னை: திறந்த வெளிப் பல்கலைக் கழகங்களில் பிஎல் பட்டம் பெற்றவர்களும் நீதிமன்றத்தில் வக்கீல் பணியாற்றலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாகப் பணியாற்றிய சிலர் திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் என்று கூறி வெளியேற்றப்பட்டனர். தமிழ்நாடு பார்கவுன்சில் வகுத்த விதி முறைகளின் கீழ் இவர்கள் பணிபுரிய அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் சீனிவாசராவ் உள்பட 20-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் உயரக்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தனர். அதில், "திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நேரடியாக பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் பி.எல். பட்டம் பெற்றுள்ளனர். டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம் அவர்களுக்கு பி.எல். பட்டம் வழங்கியுள்ளது.
சமீபத்தில் தமிழ்நாடு பார் கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பில் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களது பட்டம் செல்லாது, அவர்களது வக்கீல் பதிவும் செல்லாது என்று கூறியது. இதனடிப்படையில் சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இது இந்திய பார் கவுன்சில் சட்டத்தை மீறியதாகும். எனவே மீண்டும் பதிவு செய்து வக்கீலாக பணிபுரிய அனுமதிக்க வேண்டும், என்று கேட்டுக் கொண்டனர்.
இந்த மனு நீதிபதிகள் ஆர். பானுமதி, சுந்தரேசன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மூத்த வக்கீல்கள் என்.ஆர். சந்திரன், சங்கர சுப்பு, விஜயேந்திரன் ஆகியோர் ஆஜராகி, "தற்போது வெளியேற்றப்பட்ட வக்கீல்கள் இந்திய பார் கவுன்சிலின் நிபந்தனைகள்படி இவர்கள் தகுதியானவர்களே. எனவே அவர்களை வக்கீலாக பணிபுரிய அனுமதிக்க வேண்டும்" என்று வாதடினார்கள்.
நீதிபதிகள் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் தங்களது தீர்ப்பில் அவர்கள் கூறியதாவது:
"ஏற்கனவே தமிழ்நாடு பார் கவுன்சிலில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் பதிவு செய்து பணியாற்ற இந்த நீதிமன்றம் அனுமதிக்கிறது. இதே தகுதிகளுடன் இனி வரக்கூடியவர்களுக்கும் பார் கவுன்சில் உரிய விதிமுறைகள் வகுத்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும். அவர்களை வெளியேற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்கிறோம்..." என்று கூறியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications