தமிழகம் முழுவதும் கடும் வெயில்- புதுக்கோட்டையில் 2 மணி நேர மழையால் மக்கள் மகிழ்ச்சி

நாடு முழுவதும் மார்ச் மத்தியிலிருந்தே வெயில் கொளுத்தத் தொடங்கி விட்டது. ஏப்ரல் மாதம் முதல் கடும் வெயில் கொளுத்தி வருகிறது.
வட மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு வெயில் கடுமையாக உள்ளது. 100 டிகிரியைத் தாண்டி 110 டிகிரி வரை வெயில் உக்கிரமாக உள்ளது. டெல்லியில் இன்று 110 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.
உ.பி., ம.பி., பீகார் ஆகிய மாநிலங்களில் கடும் வெயில் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஆந்திராவில் இன்று ஒரே நாளில் கடும் வெயிலுக்கு 4 பேர் உயிரிழந்தனர். ஆந்திராவிலும், மத்தியப் பிரதேசத்திலும் கடும் வெயில் காரணமாக ஜூலை மாதம் வரை பள்ளிக்கூடங்களுக்கு அங்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
வேலூர்-சேலத்தில் தகிக்கும் வெயில்:
தமிழகத்திலும் வெயில் கடுமையாக உள்ளது. தலைநகர் சென்னையில் வானம் அவ்வப்போது மூடி மூடி வருவதால் வெயிலின் கொடுமை பெரிய அளவில் தெரியவில்லை. ஆனாலும் கடும் வெப்பமாக இருப்பதால் வீட்டுக்குள்ளும் இருக்க முடியாமல், வெளியிலும் போக முடியாமல் மக்கள் புழுங்கி வருகின்றனர்.
வேலூர், சேலத்தில் 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்தியது.
மதுரை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் 100 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்தியது.
புதுக்கோட்டையில் இன்று கடும் வெயில் அடித்து வந்த நிலையில் பிற்பகலில் சுமார் 2 மணி நேரம் இடி மின்னலுடன் கன மழை பெய்ததால், வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications