சின்னச்சாமி ஸ்டேடியம் அருகே மேலும் 3 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

நேற்றைய தினம் அடுத்தடுத்து இரண்டு முறை குண்டுகள் வெடித்த நிலையில், 8வது கேட்டில் மேலும் ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மேலும் 3 குண்டுள் கிடைத்துள்ளன. அதில் ஒரு குண்டு ஸ்டேடியத்திற்கு அருகில் உள்ள காந்தி சிலை பகுதியிலும், மற்ற இரண்டும் ஸ்டேடிய நுழைவாயில்களிலும் கிடைத்துள்ளன.
இதையடுத்து ஸ்டேடியப் பகுதிகளில் வேறு குண்டுகள் உள்ளனவா என்பதை தீவிரமாக போலீஸார் தேடி வருகின்றனர்.
நேற்று கண்டுபிடிக்கப்பட்ட குண்டு, அமோனியம் நைட்ரேட் கலவையுடன் இரும்பு போல்ட்டுகளை உள்ளே வைத்து வெடித்து சிதறும்படி செய்யப்பட்டிருந்தது.
இந்த வெடிகுண்டு இரவு 8 மணிக்கு வெடிக்கும் வகையில் அதில், 'டைமர்' பொருத்தப்பட்டு இருந்தது. கிரிக்கெட் போட்டி முடிந்து ரசிகர்கள் வெளியே வரும் நேரத்தை கணக்கிட்டு குண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
நேற்று அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்து மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் அப்பகுதி முழுக்க சோதனை நடத்தினர்.
சோதனையின் இந்த வெடிகுண்டு சிக்கியது. வெடிகுண்டு நிபுணர்கள் இதை கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யாமல் இருந்திருந்தால், பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும்.
பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் - பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக 30 ஆயிரத்துக்கும் மேலான ரசிகர்கள் மைதானத்திற்குள் இருந்தனர்.
மேலும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைவதற்காக நீண்ட வரிசையில் வெளியே காத்துக்கொண்டும் இருந்தனர்.
இந்த நேரத்தில் தான் முதல் இரண்டு குண்டுகள் நுழைவாயில் பகுதியில் வெடித்தன. ரசிகர்கள், போலீஸ்காரர்கள், தனியார் நிறுவன பாதுகாவலர்கள் என 15 பேர் வரை காயமடைந்தனர்.
ஆனால், கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்த ரசிகர்கள் இந்த குண்டுவெடிப்பால் சிறிதும் அச்சப்படவில்லை. போட்டியை காண வேண்டும் என்ற ஆர்வமும், போட்டி ரத்தாகி விடக்கூடாது என்ற கவலையுமே அவர்களிடம் காணப்பட்டது.
இதுபற்றி ரசிகர்கள் குறிப்பிடுகையில், 'குண்டு வெடித்தது பற்றி கொஞ்சம் கூட பயப்படவில்லை. தெண்டுல்கரின் அதிரடி ஆட்டத்தை பார்க்கவே நான் இங்கு வந்தோம்.
குண்டு வெடிப்பால் போட்டி ரத்தாகிவிடுமோ என்று தான் பயந்தேன். நல்லவேளை, போட்டியை நடத்தி விட்டார்கள். போட்டியை திருப்தியாக ரசித்தேன்' என்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications