கிரிக்கெட் வாரியத்தை அரசே ஏற்க வேண்டும்-லாலு
டெல்லி: கிரிக்கெட்டை சூதாட்டாமாக மாற்றிவிட்ட ஐபிஎல் போட்டிகளையே ஒட்டு மொத்தமாக ரத்து செய்துவிட்டு, இந்திய கிரிக்கெட் வாரியத்தையே மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கோரிக்கை விடுத்தார்.
கொச்சி அணி விவகாரத்தில் வெளியுறவு இணையமைச்சர் சசி தரூர் ராஜினாமா செய்துவிட்ட பின்னரும் இன்றும் இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது.
ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பேசுகையில், பெட்டிங், சூதாட்டம் என்று ஐபிஎல் அமைப்பு கிரிக்கெட் போட்டிகளையே அசிங்கப்படுத்திவிட்டது. இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியமும் துணை போகிறது.
இதனால் ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் இரண்டையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஐபிஎல் போட்டிகளையே ரத்து செய்ய வேண்டும்.
கருப்புப் பணமும் ஊழலும் ஐபிஎல் போட்டிகளி்ல் புகுந்து விளையாடி வருகின்றன. கிரிக்கெட் அமைப்புகள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்றார்.
மார்க்சிஸ்ட் எம்பி பிருந்தா காரத் கூறுகையில், இந்தப் போட்டிகளில் நடந்துள்ள ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், தரூர் ராஜினாமாவோடு முடிந்துவிடும் பிரச்சனை அல்ல இது. இதில் முழு விசாரணை அவசியம் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications