டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வில் செம்மொழி மாநாடு குறித்து அதிக கேள்விகள்
சென்னை: இந்து சமய அற நிலையத்துரை நிர்வாக அதிகாரி பணிக்கான நேர்முகத் தேர்வில் கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாடு குறித்த கேள்விகளே அதிகம் இடம் பெற்றதாம்.
கிரேடு 3 ரக நிர்வாக அதிகாரி பதவிக்கு 23 காலியிடங்கள் உள்ளன. இதை நிரப்ப கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி எழுத்துத் தேர்வு நடந்தது. டிஎன்பிஎஸ்சி சார்பில் இந்த்த் தேர்வு நடந்த்து. அதன் பின்னர் கடந்த மாதம் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதையடுத்த நேற்று நேர்முகத் தேர்வு நடந்தது.
டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நேர்முகத் தேர்வை நடத்தினர். அதில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு குறித்த கேள்விகளே அதிகம் கேட்கப்பட்டனவாம். மாநாட்டின் நோக்கம் என்ன, அதில் இடம் பெறும் நிகழ்ச்சிகள் என்னென்ன என்பது குறித்து கேட்கப்பட்டதாம்.
திருக்குறளைச் சொல்லச் சொல்லி அதன் விளக்கத்தையும் கேட்டனராம்.
இன்று மெரிட் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதிக மதிப்பெண் பெற்றோருக்கு வேலை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications