தபால்காரரிடம் ரூ.90 ஆயிரம் அபேஸ் செய்த மூதாட்டி கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி தபால் ஊழியரிடம் 90 ஆயிரம் அபேஸ் செய்த மூதாட்டி குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தெற்கு வீரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் குருசாமி. ஓய்வு பெற்ற தபால் ஊழியர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது மகள் திருமணத்திற்கு நகை வாங்குவதற்காக 90 ஆயிரத்துடன் தூத்துககுடிக்கு வந்தார்.
பழைய பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது மூதாட்டி ஒருவர் குருசாமியிடம் நைசாக பேச்சு கொடுத்தார். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது குருசாமி வைத்திருந்த 90 ஆயிரத்தை எடுத்து கொண்டு மூதாட்டி தலைமறைவாகி விட்டார்.
பணம் திருட்டு போனதை அறி்ந்த அவர் அந்த மூதாட்டியை தேடி பார்த்தார். ஆனால் அவரை காணவில்லை. இதுகுறித்து மத்திய பாகம் போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் குருசாமியிடம் 90 ஆயிரம் உங்களுக்கு எப்படி வந்தது, அதற்கு கணக்கு உள்ளதா என்று கேள்வி மேல் கேள்வி கேட்டனர்.
இதனால் மிரண்ட அவர் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் அவர் தூத்துக்குடி ஆயுதப்படையில் வேலை பார்த்து வரும் மகனிட்ம் நடந்த சம்பவத்தை கூறினார். மேலும் அந்த மூதாட்டியை பிடிப்பதற்காக தந்தை, மகன் இருவரும் பழைய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் மூதாட்டியின் அடையாளங்களை சொல்லி அவர் குறித்து துப்பு கிடைத்தால் தெரிவிக்கும்படி கூறினர்.
இந்த நிலையில் அங்குள்ள கடைக்காரர்கள் மூதாட்டியை மடக்கி பிடித்தனர். அதன்பிறகு அவரை மத்திய பாகம் போலீசில் ஓப்படைத்தனர். விசாரணையில் அந்த மூதாட்டி மேலமங்கலத்தை சேர்ந்த கோயில் பிள்ளை மனைவி காசியம்மாள் என்பதும் அவர்தான் பணத்தை திருடி சென்றிருப்பதும் தெரிய வந்தது. கொள்ளையடித்த ரூ.90 ஆயிரத்தில் 10 ஆயிரம் ரூபாயை செலவழித்து விட்டார்.
இதையடுத்து காசியம்மாளை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ரூ.80 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
கைதான காசியம்மாள் பழைய பஸ் நிலையத்தில் நின்று கொண்டு வயதானவர்களிடம் கவர்ச்சியாக பேச்சு கொடுத்து கைவரிசை காட்டுவது வழக்கம். அவரது வலையில் ஓய்வு பெற்ற தபால்காரர் குருசாமி சிக்கி விட்டார். போலீஸ் விசாரணையில் இந்த தகவல்கள் வெளியாகின.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications