ஜெர்மனி-சென்னை விமானத்தில் பயணி குடித்துவிட்டு ரகளை
சென்னை: ஜெர்மனியில் இருந்து சென்னை வந்த விமானத்தி்ல் குடித்துவிட்டு போதையில் ரகளையில் ஈடுபட்ட நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெர்மனியில் இருந்து இன்று காலை சென்னைக்கு 353 பயணிகளுடன் ஒரு விமானம வந்தது.
அதில் மது பரிமாறப்பட்டது. டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஜெரோஸ்லேன் என்ற பயணி அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு போதையில் முன் இருக்கையில் இருந்த சிறுமியின் தலையில் தட்டினார்.
இதற்கு அந்த சிறுமியின் தாய் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்த ஜெரோஸ்லேன் பெரும் ரகளையில் ஈடுபட்டார். அவரை சமாதானப்படுத்த முயன்ற சக பயணிகளையும் தாக்க முயன்றார்.
இதையடுத்து பயணி ரகளை செய்வதாக சென்னை விமான நிலையத்துக்கு தகவல் தரப்பட்டது.
விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியதும் தொழில்துறை பாதுகாப்புப் படையினர் ஜெரோஸ்லேனை தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் மது போதையில் தவறு செய்து விட்டதாக மன்னிப்பு கேட்டார்.
தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க வந்திருப்பதாக கூறிய அவர் சிறுமியிடமும், சிறுமியின் தாயாரிடமும் மன்னிப்பு கேட்டார்.
இதையடுத்து படையினர் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications