கருணாநிதி மீதும் மக்கள் அளவு கடந்த நம்பிக்கை-ஸ்டாலின்

சட்டசபையில் உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலளித்து அவர் பேசுகையில்,
இந்த புதிய சட்டப் பேரவையின் உருவாக்கத்திலிருந்து நான் என்னுடைய பதிலுரையை தொடங்குகிறேன். இந்த பேரவையின் ஒவ்வொரு கல்லும், ஒவ்வொரு மணலும், ஒவ்வொரு தூணும் முதல்வரின் உழைப்பையும், வியர்வையையும் சொல்லும்.
கரிகாலனுக்கு எப்படி கல்லணையோ, ராஜராஜனுக்கு எப்படி தஞ்சை பெரிய கோயிலோ அது போல முதல்வர் கருணாநிதியின் புகழை இந்த சட்டப் பேரவை எடுத்துக் கூறும். தஞ்சை பெரிய கோயிலின் உயரமும் 200 அடி. இந்த சட்டப் பேரவையின் உயரமும் 200 அடியாகும்.
2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலின்போது முதல்வர் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அதில் ஒன்றுதான் மீண்டும் மேலவை கொண்டு வரப்படும் என்பது. அதையே முதல் தீர்மானமாக இந்த பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
2006ம் ஆண்டு முதல் தமிழகத்தில் 11 இடைத் தேர்தல்கள் நடைபெற்றன. அனைத்திலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெற்றது. மக்கள் அளித்த இந்த தீர்ப்பு முதல்வர் மீதும், தமிழக அரசு மீதும் அவர்கள் வைத்துள்ள அளவு கடந்த நம்பிக்கைக்கு சிறந்த சான்றாகும் என்றார்.
பி்ன்னர் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மீது 2009-10ம் ஆண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் பயனடையும் வகையில் சுமார் 1 லட்சம் சுய உதவி குழுக்களை அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி 5.8.2009 முதல் 31.3.2010க்குள் 50,000 சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சிறப்பாக செயல்படும் 1000 ஊராட்சி கூட்டமைப்புகளுக்கு ஊக்கத் தொகையாக தலா ஒரு லட்சம் வீதம் ரூ.10 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2009-10ம் ஆண்டில் 1676.37 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ. 671.22 கோடி அதிகமாகும்.
பாரதப் பிரதமர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1,325 கோடி நிதி ஒதுக்கீட்டில் இதுவரை 1,665.55 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைப் பணிகள் தொடங்கப்பட்டு ரூ.551.19 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 5,114 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் 2009-10ம் ஆண்டில் ரூ. 80.08 கோடி மதிப்பீட்டில் 1,078 கிலோ மீட்டர் நீளத்துக்கு தார் சாலைகள் போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 744.65 கி.மீ தார் சாலை போடப்பட்டுள்ளன.
அண்ணா கிராம மறு மலர்ச்சி திட்டத்தின் 2009-10ம் ஆண்டில் 2,510 கிராம ஊராட்சிகளுக்கு 507.22 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. 46,052 பணிகள் எடுக்கப்பட்டு 40,666 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications