Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேலம் இரும்பாலை: நிலம் தந்தோர் வாரிசுகளுக்கு வேலை: அரசு நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

Stalin
சென்னை: சேலம் இரும்பாலை அமைக்க நிலம் கொடுத்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு வேலை கிடைக்கவும், அவர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரவும் மாநில அரசு முயற்சி மேற்கொள்ளும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சட்டசபையில் இன்று சேலம் இருப்பாலை விவகாரம் தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், அதிமுக உறுப்பினர் சின்னசாமி, பாமக உறுப்பினர் ஜி.கே.மணி மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சிவபுண்ணியம், விடுதலைச் சிறுத்தைகள் உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் பேசினர்.

முதலமைச்சர் கருணாநிதியும், துணை முதல்வர் ஸ்டாலினும் மத்திய அரசுடனும், இரும்பாலை நிர்வாகத்துடனும் பேசி இரும்பாலை உருவாவதற்கு நிலம் கொடுத்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய வேலைவாய்ப்பும், நிவாரணமும் பெற்றுத் தர வேண்டும்,

இன்று அந்தப் பகுதியில் நிலங்கள் அதிக விலைக்கு போகின்றன. ஆனால், இரும்பாலை நிர்வாகத்திற்காக அன்றைக்கு ஏக்கர் 500 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை அந்த மக்கள் விற்று விட்டனர். அவர்களுடைய நிலை கருதி உரிய நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்,

இந்திய ஸ்டீல் ஆணையம் மற்ற மாநிலங்களில் நிலம் அளித்தவர்களுக்கு வேலையில் முன்னுரிமை அளிப்பதைப் பேல சேலத்திலும் பின்பற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதற்கு பதிலளித்த துணை முதல்வர் ஸ்டாலின்,

சேலம் இரும்பாலைக்கு நிலம் வழங்கியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசிய உறுப்பினர்கள் தங்கள் உணர்வுகளை எடுத்துச் சொன்னார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென்ற உறுப்பினர்களின் உணர்வுதான் முதல்வருக்கும் இந்த அரசுக்கும் உள்ளது.

இந்தப் பிரச்சனை தொடர்பாக இன்று இங்கு விவாதம் நடக்கும் என்பதை அறிந்ததும் சேலம் கலெக்டரை தொடர்பு கொண்டு அரசு சார்பில் சில விவரங்களை சேகரித்தோம். சேலம் இரும்பாலை தொடங்குவதற்கு 1970ம் ஆண்டு சுமார் 3,000 குடும்பங்கள் நிலங்களை வழங்கியிருக்கிறார்கள்.
அப்படி வழங்கியவர்களில் 203 குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு அவரவர் தகுதிக்கேற்ப வழங்கப்பட்டுள்ளது.

வேலை கிடைக்காதவர்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அப்போது நிலம் வழங்கியவர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந் நிலையில் நிலம் கொடுத்து வேலை கிடைக்காதவர்களின் பிரச்சனைக்கு உரிய முடிவு மேற்கொள்ள நாளை சேலம் கலெக்டரும், இரும்பாலை நிர்வாகத்தினரும் கலந்தாலோசனை நடத்த உள்ளனர்.

இதன் மையப் பொருளாக மீண்டும் இதற்கென ஒரு தனி வேலைவாய்ப்பகம் உருவாக்கப்பட்டு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தவுள்ளது.

இந்த கூட்டத்தின் முடிவை அடுத்து வேலை கிடைக்காதவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி அவர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தருவதற்கு முதல்வரின் ஆணையை ஏற்று மாநில அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றார் ஸ்டாலின்.

திமுக ஆட்சியின் தாராளம்-கருணாநிதி:

முன்னதாக சட்டசபை நடவடிக்கைகள் தொடங்கிய பிறகு சேலம் உருக்காலை விவாதத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர் கருணாநிதி கூறுகையில்,

கடந்த 19ம் தேதியன்று என்னுடைய மானியமான பொதுப்பணித்துறை விவாதிக்கப்பட்டு நான் பதிலளிக்க வேண்டிய நிலையிருந்ததை அறிவீர்கள். எனக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் 12 மணிக்குள்ளாக மானியக் கோரிக்கையின் மீது கருத்துரைகள், பதிலுரைகள் இவற்றையெல்லாம் முடித்து விட்டால் நன்றாக இருக்கும். வசதியாக இருக்குமென்று செங்கோட்டையனிடம் முறையிட்டேன்.

கேள்வி நேரத்தை ஒத்திவைக்கலாம், அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு மானியக் கோரிக்கையை விவாதிக்கலாம். நானும் பதில் சொல்ல ஏதுவாக இருக்கும் என்று சொன்னேன்.

எல்லோருடைய ஆதரவு இருந்தாலும் நான் அதற்குச் சம்மதிக்க முடியாது என்று அவர் சொன்னார். இருக்கின்ற சட்டத்தை மீறக் கூடாது என்று நானும் அதற்கு ஒப்புக் கொண்டு அன்றைக்கு ஒன்றரை மணி வரையிலே பொதுப்பணித்துறை மானியத்திலே விவாதித்து பதில் அளித்தேன்.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் தாராளம், பெருந்தன்மை இவையெல்லாம் ஒருவழிப் பாதையாகத்தான் இருக்கிறது. (ஆளும் கட்சியினர் மேசையைத் தட்டும் ஒலி) ஆனால் இன்றைக்கு விதிக்கு மாறாக ஒரு பத்து நிமிடம் தாமதமாகக் கொடுத்தாலும் சேலம் உருக்காலைப் பிரச்சனையை நாங்கள் பேசித்தான் தீருவோம் என்று சொல்கிறார்கள். செங்கோட்டையன் அதற்கான வேண்டுகோளை விடுக்கிறார்.

பெருந்தன்மை திமுக அரசுக்கு சொந்தம் என்பதால் விட்டுத் தரலாம். தயவு செய்து நீங்கள் அவர்களைப் பேச அழைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.
இதையடுத்து அதிமுக உறுப்பினர் சின்னசாமிக்கு விவாதத்தில் இறுதியாக பங்கேற்று பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+