ஸ்பெக்ட்ரம் விவகாரம்-அதிமுக ரகளை: பொறுமையிழந்த பிரணாப்
டெல்லி: 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பும் குற்றச்சாட்டுகளுக்கு நிதி மசோதா நிறைவேற்றிய பின்னர் மத்திய அரசு பதிலளிக்கும் என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
மக்களவையில் நிதி மசோதா தொடர்பான விளக்கங்களை பிரணாப் அளித்துக் கொண்டிருந்தபோது அதிமுக, பாஜக எம்பிக்கள் 2-ஜி ஒதுக்கீடு விவகாரம், தலைவர்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம், ஐபிஎல் ஊழல் உள்ளிட்ட பிரச்சனைகளைக் கிளப்பினர்.
அதிமுக எம்பிக்கள் சபாநாயகரின் இருக்கையை முன் கூடி முற்றுகையிட்டனர். பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
இந்த அமளியால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
இந் நிலையில் தனது பொறுமையை இழந்த பிரணாப் முகர்ஜி, 543 உறுப்பினர்கள் அடங்கிய இந்த அவையை 10 பேர் (அதிமுக எம்பிக்கள் 9 பேரை குறிப்பிட்டு) மட்டும் கட்டுப்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
உங்களது செயல் பயங்கர எரிச்சலூட்டுகிறது. உடனே நீங்கள் உங்கள் இருக்கைகளுக்குச் செல்லுங்கள்.
நிதி மசோதா நிறைவேற்றத்துக்குப் பிறகு எதிர்க்கட்சியினரின் கோரிக்கைகளுக்கு அரசு பதிலளிக்கும். அவையை விட்டு நான் ஓடி விடமாட்டேன், நிச்சயம் பதிலளிப்பேன். நானோ அல்லது பிரதமரோ நிச்சயம் பதில் அளிப்போம் என்று கோபமாகக் கூறினார்.
அதே நேரத்தில் 2-ஜி ஒதுக்கீடு தொடர்பாக விவாதம் நடத்தப்படுமா என்று எதிர்க் கட்சியினர் கோரியதற்கு, அது தொடர்பாக எந்த உத்தரவாதத்தையும் அளிக்க முடியாது. இது தொடர்பாக வெளியான பத்திரிகை செய்திகளை ஆராய்ந்துவிட்டு முடிவு செய்யப்படும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications