நர்சிங் விடுதியில் மாணவியை கட்டிப் போட்டு தாக்கிய கொள்ளையன்
சென்னை: நர்சிங் மாணவிகள் விடுதியில் புகுந்த கொள்ளையன் மாணவியை கட்டிப் போட்டுவிட்டு தாக்கியதையடுத்து மாணவிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கோடம்பாக்கம் ரயில்வே பார்டர் ரோட்டில் உள்ள ஜே.வி. நர்சிங் கல்லூரியில் 68 மாணவிகள் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.
இவர்கள் தங்குவதற்கு மாடியில் அறைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு கொள்ளையன் ஒருவர் இங்கே புகுந்தான். சத்தம் கேட்டு அமலா என்ற எழுந்தார்.
இதைப் பார்த்த கொள்ளையன் அமலா சுதாரிப்பதற்குள் அவரது வாயில் துணியை அடைத்து கட்டிவிட்டு, கை-கால்களை கட்டிப் போட்ட அந்த வகொள்ளையன் அவரை சரமாரியாக தாக்கினான். இதில் அமலா மயங்கி விழுந்தார்.
இதையடு்த்து கொள்ளையன் தப்பியோடி விட்டான். அமலாவின் முனகல் சத்தத்தை கேட்டு எழுந்த சக மாணவிகள் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக விடுதி மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டனர். மேலும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொள்ளையனைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று காலை 50க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்கக அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். திடீரென கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை எதிரே பூந்தமல்லி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு கோஷமிட்டனர்.
கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் சாரங்கன் விரைந்து வந்து அவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவிகள் மறியலை கைவிட மறுத்ததால் பெண் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.
இதனால் பூந்தமல்லி சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலின்போது ஒரு மாணவி திடீரென மயங்கி விழுந்தால் பரபரப்பு ஏற்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications