மே தினத்தையொட்டி அதிமுக தொழிற்சங்க தொழிலாளர்களுக்கு நிதியுதவி-ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மே தினத்தையொட்டி அண்ணா தொழிற்சங்கப் பேரவையைச் சேர்ந்த நலிவடைந்த தொழிலாளர்களுக்கு நிதியுதவியை அறிவித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயல்லிதா.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:

உழைப்போர் திருநாளாம் மே தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்குத் தலா ரூ.25 ஆயிரம் வீதம் குடும்ப நல நிதி உதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் ஒவ்வொருவர் வீதமும், போக்குவரத்துக்கழக அண்ணா தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள நலிந்த தொழிலாளர்கள் மாவட்ட வாரியாக ஒவ்வொருவரும், ஆக மொத்தம் தேர்ந்தெடுக்கப்பட்ட 92 நலிந்த தொழிலாளர்களுக்குத்தலா ரூ.25 ஆயிரம் வீதம், மொத்தம் 23 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதி உதவி வழங்கப்படும்.

இவர்களுக்கான நிதி உதவி வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+